விஜய் டிவி கொடுத்த புகார் முற்றிலும் பொய்: மதுமிதா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்ட மதுமிதா, சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சர்ச்சைக்குரிய சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து விஜய் டிவி நிர்வாகம், மதுமிதா மீது சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தது. இந்த புகார் மனு மீது விரைவில் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் மதுமிதா சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: விஜய் டிவி என்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய். நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன், நிகழ்ச்சியில் இருந்து ஏன் வெளியேற்றப்பட்டேன் என எனக்கு தெரியவில்லை. என்னை கேள்விகள் கேட்பதை விட அந்த தனியார் தொலைக்காட்சியிடம் கேட்டால் சரியான விடை உங்களுக்கு கிடைக்கும் என்று கூறினார்.
ஏற்கனவே தன்மீது கொடுக்கப்பட்ட புகார் குறித்து தனக்கு சட்டப்பூர்வமாக காவல்துறையினர்களிடம் இருந்து போன் கால் எதுவும் வரவில்லை என்றும் அவ்வாறு காவல்துறையினர் அழைத்தால் தனது தரப்பை விளக்கத்தை அளிக்க தான் தயார் என்றும் மதுமிதா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com