வாய்ப்புகாக படுக்கை விஷயத்தில் பொய் சொன்னாரா ரகுல்? உண்மையை உடைக்கும் பிரபல நடிகை

  • IndiaGlitz, [Friday,March 30 2018]

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான ரகுல் ப்ரித்திசிங் சமீபத்தில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் குறித்து கூறியபோது, 'மற்ற இடங்களில் எப்படியோ, தெலுங்கு திரையுலகில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இல்லை என்றும், திரையுலகில் இத்தனை வருடங்கள் உள்ள தன்னிடம் இதுவரை யாரும் அவ்வாறு அணுகியது இல்லை என்றும் கூறினார்.

மேலும் தகுதி, திறமை இருந்தால் திரையுலகில் முன்னேறலாம் என்றும் திறமை ஒன்று மட்டுமே திரையுலகில் வெற்றியை தேடி கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில் ரகுல்ப்ரித்திசிங் பொய் கூறுவதாகவும், இருக்கும் ஒரு விஷயத்தை இல்லாதவாறு அவர் மறைத்து கூறுவதாகவும், தெலுங்கு திரையுலகில் இன்னும் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாகவும் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகை மாதவி லதா கூறியுள்ளார்.

இவர் 'நசாவுலே' என்ற படத்தின் மூலம் பிரபலமாகி ஒருசில தெலுங்கு படங்களிலும் விஷால் நடித்த 'ஆம்பள' என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சுசிலீக்ஸ் போல் ஸ்ரீலீக்ஸ்: பிரபல நடிகர்கள் கலக்கம்

பிரபல பாடகி சுசித்ராவின் சமூகவலைத்தள பக்கம் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு சுசிலீக்ஸ் என்ற பெயரில் கோலிவுட்டில் ஏற்படுத்திய பரபரப்பு அனைவரும் அறிந்ததே.

தமிழ்நாட்டில் இடமில்லை: வேற மாநிலத்திற்கு போங்க: கமல், ரஜினியை தாக்கிய முதல்வர்

கோலிவுட் திரையுலகில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோர்களின் அரசியல் வருகை அரசியல் தலைவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உலகம் நீங்கள் அழவேண்டும் என்று விரும்பியது: அஸ்வின் நெகிழ்ச்சி பதிவு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரம் உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

தமிழ் மக்களின் அளவு கடந்த பாசம் வியக்க வைக்கிறது: ஹர்பஜான்சிங் நெகிழ்ச்சி

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் கம்பீரமாக மீண்டும் புத்துணர்ச்சியுடன் களம் புகவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்

மது சிகரெட் போல் காபியிலும் எச்சரிக்கை வாசகங்கள்: நீதிமன்றம் உத்தரவு

மது மற்றும் சிகரெட் தயாரிப்புகளில் உடல் நலத்திற்கு தீங்கு என்னும் எச்சரிக்கை வாசகம் இருப்பது போல் காபி பொருட்களிலும் எச்சரிக்கை வாசகங்கள் இருக்க வேண்டும் என கலிபோர்னியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.