வயதுக்கு ஏற்றாவாறு நடந்துகொள்: மாதவனுக்கு மனைவி கூறிய அறிவுரை
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த ஒரு புகைப்படத்திற்கு ’வயதுக்கு ஏற்ற மாதிரி நடந்து கொள்’ என தனது மனைவி அறிவுரை கூறியதாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் மற்றும் ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மாதவன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவருடைய இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் தூங்கி எழுந்தவுடன் சட்டையில்லாமல் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த புகைப்படம் குறித்து தனது மனைவி தன்னிடம், ‘வயதுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளுமாறு தன்னிடம் தெரிவித்ததாகவும், நான் ஏன் அந்த புகைப்படத்தை பதிவு செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை’ என்றும் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments