'பாகுபலி 2', பைரவாவுக்கு அடுத்த இடத்தை பிடித்த 'விக்ரம் வேதா'

  • IndiaGlitz, [Monday,August 07 2017]

இந்த ஆண்டில் முதல் மூன்று வாரத்தில் அதிக வசூல் செய்த படங்களாக எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்டமான படமான 'பாகுபலி 2' முதல் இடத்திலும் தளபதி விஜய்யின் 'பைரவா' படம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் உருவான 'விக்ரம் வேதம்' திரைப்படம் இந்த ஆண்டின் மிக அதிக வசூல் செய்த படங்களில் 3வது இடத்தை பிடித்துள்ளது.

மூன்று வாரங்களாக நல்ல வசூலை கொடுத்து கொண்டிருக்கும் 'விக்ரம் வேதா' திரைப்படம் கடந்த வார இறுதி நாட்களில் சென்னையில் 19 திரையரங்குகளில் 228 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.91,00,858 வசூல் செய்துள்ளது. மேலும் மூன்றாவது வாரத்திலும் திரையரங்குகளில் 85% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படம் கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 6 வரை சென்னையில் ரூ.6,47,16,829 வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. விஜய்சேதுபதி, மற்றும் மாதவன் ஆகிய இருவருக்குமே இந்த வசூல் மிகப்பெரிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.