பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழ் நடிகரின் மகன்

  • IndiaGlitz, [Monday,April 09 2018]

ஒருபக்கம் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் பிரபல தமிழ் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத்தந்து பெருமை சேர்த்துள்ளார்.

தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட நடிகர் மாதவன் மகன் வேதாந்த்,  பதக்கம் வென்றுள்ளார், இந்த தகவலை நடிகர் மாதவன் தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளார். இந்தியாவுக்கு தனது மகன் நீச்சல் போட்டியில் முதல் பதக்கம் பெற்று கொடுத்ததற்காக தானும், தனது மனைவி சரிதாவும் பெருமைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

நீச்சல் போட்டியில் பதக்கம் பெற்று தந்த மாதவன் மகனுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

 

More News

இராண்டாண்டுகள் கழித்தும் அதே ஃபார்முலா:

பெரிய பெரிய மாஸ் ஹீரோக்களின் படங்கள் தீபாவளி பொங்கல் ரிலீஸிற்கு கொஞ்சமும் சளைக்காமல் சென்னை அணியின் ரிட்டர்ன் அமைந்தது என்றால் அது மிகையாகாது. 

கமல் எனக்கு எதிரி கிடையாது: ரஜினிகாந்த் பேட்டி

ஆன்மீக அரசியல் செய்தால் ரஜினியை எதிர்ப்பேன் என்று கமல்ஹாசன் கூறியது குறித்து ரஜினியிடம் கேட்டபோது, 'நான் கமலை எதிர்க்க மாட்டேன். அவர் என் எதிரி கிடையாது' என்று ரஜினிகாந்த் பதிலளித்தார்.

அறவழி போராட்டத்தில் கமல்-ரஜினி: களைகட்டியது வள்ளுவர் கோட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடிகர் சங்கம் உள்பட மூன்று அமைப்புகள் இணைந்து நடத்தி வரும் அறவழி போராட்டம் காலை 9 மணி முதல் நடந்து வருகிறது.

விபிஎஃப் கட்டணம் திடீர் குறைப்பு: முடிவுக்கு வருகிறதா வேலைநிறுத்தம்

டிஜிட்டல் நிறுவனங்கள் விபிஎஃப் கட்டணத்தை நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கத்தினர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வேலைநிறுத்த போராட்டம் செய்து வருகின்றனர்

வெற்றியை சென்னை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்: பிராவோ

நேற்று தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் த்ரில் வெற்றி பெற்றது.