இந்தியாவுக்காக தங்கப் பதக்கங்களை குவித்த மாதவன் மகன்.. இத்தனை பதக்கங்களா?

  • IndiaGlitz, [Monday,April 17 2023]

பிரபல நடிகர் மாதவன் மகன் வேதாந்த் என்பவர் நீச்சல் போட்டியில் இந்தியாவுக்காக பல பதக்கங்கள் பெற்று கொடுத்துள்ள நிலையில் தற்போது மலேசியாவில் நடந்த நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 5 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மாதவன், நடிகர் மட்டுமின்றி இயக்குனர் தயாரிப்பாளராகவும் இன்று வருகிறார் என்பதும் தற்போது அவர் ’தி டெஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சித்தார்த் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாதவன் மகன் வேதாந்த் ஏற்கனவே இந்தியாவின் சார்பில் பல சர்வதேச பதக்கங்களை வென்று உள்ள நிலையில் சமீபத்தில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த மலேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார். இந்த போட்டியில் அவர் 50, 100, 200, 400 மற்றும் 1500 மீட்டர் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு 5 போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாதவன் தனது மகிழ்ச்சியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த வார இறுதியில் கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய நீச்சல் போட்டியில் கடவுளின் கருணையுடனும், உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களுடன் இந்தியாவுக்காக ஐந்து தங்கப் பதக்கங்களை வேதாந்த் வென்று உள்ளார். மிகுந்த மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார். அவரது பதிவை அடுத்து ரசிகர்கள் மாதவன் மற்றும் அவரது மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

'சூது கவ்வும் 2' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. விஜய் சேதுபதி இல்லையா?

நலன் குமாரசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் 'சூது கவ்வும்'. திருக்குமரன்  என்டர்டெயின்மென்ட்  

சியான் விக்ரம் பிறந்த நாள்.. வேற லெவல் 'தங்கலான்' மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பா ரஞ்சித்..!

 நடிகர் சியான் விக்ரம் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவர் நடித்து வரும் 'தங்கலான்' படத்தின் வேற லெவல் மேக்கிங் வீடியோவை இயக்குனர் பா ரஞ்சித் வெளியீட்டு தனது பிறந்தநாள்

'கங்குவா' என்றால் என்ன அர்த்தம்.. ஃபயரான விளக்கம் அளித்த சிறுத்தை சிவா..!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வீடியோ நேற்று வெளியானது என்பதும் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை

விஜய் சேதுபதி விலகிய முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படம்.. யார் நடிக்கிறார் தெரியுமா?

இலங்கை முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் முயற்சிகள் நடந்த போது அதில் முத்தையா முரளிதரன்

'நாயகன்' கமல் மகளாக நடித்த நடிகையை ஞாபகம் இருக்கிறதா? க்யூட் குடும்ப புகைப்படங்கள்..!

பிரபல இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில் உருவான 'பூவிழி வாசலிலே' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கார்த்திகா. அதன் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில்