இந்தியாவுக்காக தங்கப் பதக்கங்களை குவித்த மாதவன் மகன்.. இத்தனை பதக்கங்களா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் மாதவன் மகன் வேதாந்த் என்பவர் நீச்சல் போட்டியில் இந்தியாவுக்காக பல பதக்கங்கள் பெற்று கொடுத்துள்ள நிலையில் தற்போது மலேசியாவில் நடந்த நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 5 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மாதவன், நடிகர் மட்டுமின்றி இயக்குனர் தயாரிப்பாளராகவும் இன்று வருகிறார் என்பதும் தற்போது அவர் ’தி டெஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சித்தார்த் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாதவன் மகன் வேதாந்த் ஏற்கனவே இந்தியாவின் சார்பில் பல சர்வதேச பதக்கங்களை வென்று உள்ள நிலையில் சமீபத்தில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த மலேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார். இந்த போட்டியில் அவர் 50, 100, 200, 400 மற்றும் 1500 மீட்டர் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு 5 போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மாதவன் தனது மகிழ்ச்சியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த வார இறுதியில் கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய நீச்சல் போட்டியில் கடவுளின் கருணையுடனும், உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களுடன் இந்தியாவுக்காக ஐந்து தங்கப் பதக்கங்களை வேதாந்த் வென்று உள்ளார். மிகுந்த மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார். அவரது பதிவை அடுத்து ரசிகர்கள் மாதவன் மற்றும் அவரது மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
With Gods grace and all your wishes Vedaant gets 5 golds for India ( 50, 100,200,400 & 1500m) with 2 PB’s at the Malaysian invitational age group championships,2023 held this weekend in Kuala Lumpur. Elated and very grateful. 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️Thank you @swimmingfedera1 @Media_SAI pic.twitter.com/vaDMmiTFnh
— Ranganathan Madhavan (@ActorMadhavan) April 16, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments