கதையே மாறிவிட்டது, இதுதான் புதிய இந்தியா: பிரதமர் மோடி குறித்து மாதவன் பேச்சு!

  • IndiaGlitz, [Friday,May 20 2022]

டிஜிட்டல் பொருளாதாரம் என்பது பேரழிவு என பொருளாதார வல்லுனர்கள் கூறிய நிலையில் கதையே மாறிவிட்டது என்றும், இதுதான் புதிய இந்தியா எனவும் கேன்ஸ் விழாவில் நடிகர் மாதவன் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘பிரதமர் மோடி இந்தியாவில் மைக்ரோ பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினார். அப்போது பொருளாதார நிபுணர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. விவசாயிகளுக்கும் பாமர மக்களுக்கும் டிஜிட்டல் கரன்சி பற்றியும், ஆன்லைன் பணபரிவர்த்தனை பற்றியும் எப்படி தெரியும்? என்றும் கேள்வி எழுப்பினார்கள். இது ஒரு மிகப்பெரிய பேரழிவை போகிறது என்றும் எச்சரித்தனர்.

ஆனால் இரண்டு ஆண்டுகளில் ஒட்டுமொத்த கதையே மாறிவிட்டது. இப்போது உலகிலேயே டிஜிட்டல் பொருளாதாரத்தை அதிகமாக பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஏனெனில் இந்திய விவசாயிகளுக்கும் இந்திய மக்களுக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு பற்றி கற்றுத் தர வேண்டிய அவசியமே இல்லை. இதுதான் புதிய இந்தியா என்று கூறியுள்ளார். நடிகர் மாதவனின் இந்த வீடியோவை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார்.

இந்த நிலையில் நடிகர் மாதவன் நடித்து இயக்கிய ‘ராக்கெட்டரி’ திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட போது மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.