'இறுதிச்சுற்று'க்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

  • IndiaGlitz, [Monday,September 26 2016]

பெண் இயக்குனர் சுதா இயக்கத்தில் மாதவன், ரித்திகாசிங் நடித்த 'இறுதிச்சுற்று' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்திற்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
வரும் அக்டோபர் 25 முதல் நவம்பர் 3 வரை நடைபெறவுள்ள 29வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட 'இறுதிச்சுற்று' திரைப்படம் தேர்வு பெற்றுள்ளது. இந்த செய்தி 'இறுதிச்சுற்று' படக்குழுவினர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிஜ பாக்ஸரான ரித்திகாசிங் நடித்த இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. வெங்கடேஷ், ரித்திகாசிங் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.