முதல்முறையாக இயக்கிய படத்தின் காட்சிகளை பிரதமரிடம் போட்டு காட்டிய தமிழ் நடிகர்!

  • IndiaGlitz, [Monday,April 05 2021]

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் தான் முதன் முதலாக இயக்கிய படத்தின் ஒருசில காட்சிகளை பிரதமரிடம் போட்டு காட்டியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மாதவன் தற்போது ’ராக்கெட்டெரி’ என்ற படத்தில் நடித்து இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் பிரதமர் மோடியிடம் இருந்து விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களுக்கும் தனக்கும் அழைப்பு வந்ததாகவும் இதனையடுத்து இருவரும் நேரில் பிரதமரை சந்தித்ததாகவும் மாதவன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அப்போது தான் இயக்கிய நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’ராக்கெட்டெரி’ திரைப்படத்தின் ஒரு சில காட்சிகளை பிரதமரிடம் போட்டு காட்டியதாகவும் அதற்கு அவர் தன்னை பாராட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் தமிழ் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

மேலும் தற்போது மாதவன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் அவர்கள் விரைவில் குணமாகி வீடு திரும்புவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.