கல்யாணத்திற்கு எல்லாரும் மறக்காம வந்துருங்க: நடிகர் மாதவனின் வைரல் வீடியோ! 

  • IndiaGlitz, [Saturday,March 27 2021]

நடைபெற இருக்கும் கல்யாணத்திற்கு அனைவரும் தவறாமல் வாருங்கள் என நடிகர் மாதவன் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் திரையுலக நட்சத்திரங்கள் பலரின் உதவியுடன் தேர்தல் விழிப்புணர்வு வீடியோக்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் நடிகர் மாதவன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. எல்லோரும் தவறாமல் வந்துவிடுங்கள், வந்து நல்லபடியாக வாக்களித்து விட்டு போங்கள். என்ன ஒரு கல்யாணத்திற்கு அழைப்பது போல் அழைக்கிறேன் என்று பார்க்கிறீர்களா? இது நம் நாட்டின் கல்யாணம். அதில் அனைவரையும் விட முக்கியமான விருந்தினர் நீங்கள்தான். அதனால் மறக்காமல் வந்து ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்களியுங்கள்’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

கணவருடன் சமீபத்தில் திருமணமான தமிழ் நடிகை: வைரல் புகைப்படம்!

பிரபல தமிழ் நடிகை ஒருவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் தற்போது கணவருடன் அந்த நடிகை இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது 

கள்ள உறவில் பிறந்தவர் அவர்...!எதிர்கட்சியினரை பார்த்து  ராசா சர்ச்சை பேச்சு...!

தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வரை குறித்து தரம் தாழ்ந்து பேசிய ஆ.ராசாவுக்கு, சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் கண்டனங்கள் பெருகி வருகின்றன.

மநீம -வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த நடிகை கஸ்தூரி...! என்ன சொன்னார் தெரியுமா...?

மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து, கன்னியாகுமரி தொகுதியில் நடிகை கஸ்தூரி  பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார்.

சீமானுக்கு உயரும் ஆதரவுகள்...! வெற்றிக்கனியை சுவைப்பார சீமான்..! கருத்துக்கணிப்புகள் சொல்வது என்ன..?

சீமானுக்கு  சமூக வலைத்தளங்களில் பெருகிவரும் ஆதரவால், தேர்தல் களத்தில் வெற்றிவாய்ப்பு அவருக்கு ஏறுமுகமாகவே உள்ளது.

திமுகவுக்கு இதுவே இறுதி… தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் பேச்சு!

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி