தோனி மகளை மிரட்டிய 16 வயது சிறுவன் கைது குறித்து நடிகர் மாதவன்!

  • IndiaGlitz, [Tuesday,October 13 2020]

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்வியை பெற்று வருவதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. குறிப்பாக தோனியின் மனைவி சாக்சி தோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் பகுதியில் அவரது ஐந்து வயது மகளுக்கு பாலியல் மிரட்டல் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தோனி வீட்டிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜார்கண்ட் அரசு செய்தது.

இந்த நிலையில் தோனியின் மனைவி சாக்சி தோனி தனது மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து செய்த புகாரின் அடிப்படையில் குஜராத்தை சேர்ந்த 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னை அணி தோல்வி அடைந்ததை அடுத்தே அந்த சிறுவன் தோனி மகளுக்கு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் 16 வயது சிறுவனின் மிரட்டலும், அதற்கு அதிரடியாக போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்து கருத்து கூறிய நடிகர் மாதவன், ‘எம்.எஸ். தோனியின் மகளுக்கு எதிராக அச்சுறுத்தல்களை வெளியிட்டதற்காக சிறுவனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு எனது பாராட்டுக்கள். கடவுள் மற்றும் சட்டத்திற்கு பயப்படாமல் இதுபோன்ற முகமற்ற அரக்கர்கள் தங்களை யார் என்ன செய்ய முடியும் என்று நினைத்து, இணையத்தில் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். சிறுவர்களாக இருந்தாலும் தகுந்த நடவடிக்கை தேவை’ என்று கூறியுள்ளார்.

More News

பதில் சொல்லிட்டு போங்க: சுரேஷை வச்சு செஞ்ச வேல்முருகன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய சுரேஷ் சக்ரவர்த்தி இதுவரை யாருடன் சண்டை போடவில்லை என்பதை மட்டும்தான் கணக்கு பார்க்க வேண்டும் போல் இருக்கின்றது.

பூனை வளர்க்க ஆசைப்பட்டு புலிக்குட்டியை வளர்த்துவிட்ட தம்பதி… சுவாரசியச் சம்பவம்!!!

பிரான்ஸ் நாட்டில் ஒரு தம்பதி ஆன்லைனில் பூனைக்குட்டி வாங்கி வளர்க்க முடிவு செய்து விபரீதத்தில் மாட்டிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது.

9 வயதில் மோட்டார் பைக் சாம்பியன்… தமிழகச் சிறுவனின் தெறிக்கவிடும் சாதனை!!!

செல்போன் திரையைத் தொட்டு விடீயோ கேம் விளையாடும் வயதில் பைக்கை பேய் வேகத்தில் ஓட்டுகிறான் தமிழகத்தைச் சேர்ந்த சுஜன்

ஜாலியா ஒரு டூர்… சுற்றுச்சூழல் காக்கும் அலையாத்தி காடுகள்…

கடல் எனும் பேரக்கன் அதன் எல்லையில் இருக்கும் வரையில்தான் எல்லோருக்கும் நல்லது. ஒருவேளை கரையைத் தாண்டி வந்தால் நிலைமை அவ்வளவுதான்.

குழந்தை பெற்ற 14 நாட்களில் கொரோனா பணிக்குத் திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி: ஆச்சரிய தகவல் 

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் குழந்தை பெற்ற 14 நாட்களில் கொரோனா பணிக்கு திரும்பி கைக்குழந்தையுடன் பணி செய்து கொண்டிருக்கும் புகைப்படம்