நடிகர் மாதவன் நடிக்கும் அடுத்த படத்தின் நாயகி இந்த பாலிவுட் பிரபலமா? ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,July 18 2023]

நடிகர் மாதவன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

ஏற்கனவே ’அயோத்தி’ இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் மாதவன் மற்றும் கங்கனா ரனாவத் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த படத்தை அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் வட இந்திய மற்றும் தென்னிந்திய பிரபலம் இணையும் மெகா பட்ஜெட் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மாதவன் மற்றும் கங்கனா ரனாவத் படமாக தான் இருக்கும் இது என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை ’அயோத்தி’ இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்குவாரா அல்லது வேறு இயக்குனர் இயக்குவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே பாலிவுட் பிரபலம் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் நடிக்கும் படம் ஒன்றின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதேபோல் நயன்தாராவுடன் மாதவன் நடிக்கும் ’தி டெஸ்ட்’ என்ற திரைப்படம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'ஜென்டில்மேன் 2' படத்தின் முக்கிய பணி துவக்கம்.. கேரள அரண்மனையில் குவிந்த பிரபலங்கள்..!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'ஜென்டில்மேன்' என்ற திரைப்படம் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு

'தலைவரு அலப்பறை': 'ஜெயிலர்' செகண்ட் சிங்கிள் ரிலீஸ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற Hukum என்ற பாடல் என்றும் மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த பாடல் வெளியாகி இணையத்தில்

கணவருக்கு பாதபூஜை செய்த தமிழ் நடிகை.. சனாதன தர்மத்தில் இது முக்கியம் என்றும் பதிவு..!

சூர்யா, கார்த்தி உள்பட பிரபலங்களுடன் நடித்த நடிகை தனது கணவருக்கு பாத பூஜை செய்த புகைப்படத்தை பதிவு செய்து 'சனாதன தர்மத்தில் இது முக்கியமானது' என்றும் பதிவு செய்துள்ளார்.  

'காவாலா' பாடலுக்கு தாறுமாறான ஆட்டம் போட்ட நடிகை .. தமன்னா பார்த்தால் அவ்வளவுதான்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'காவாலா' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து

உன்னை பார்த்து பெருமைப்படுகிறேன் தங்கமே... நயனுக்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன்..!

நடிகர் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' திரைப்படத்தின் நாயகியாக நடித்துள்ள நயன்தாராவின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டருக்கு 'உன்னை பார்த்து பெருமைப்படுகிறேன்'