நடிகர் மாதவன் நடிக்கும் அடுத்த படத்தின் நாயகி இந்த பாலிவுட் பிரபலமா? ஆச்சரிய தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மாதவன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
ஏற்கனவே ’அயோத்தி’ இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் மாதவன் மற்றும் கங்கனா ரனாவத் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த படத்தை அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் வட இந்திய மற்றும் தென்னிந்திய பிரபலம் இணையும் மெகா பட்ஜெட் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மாதவன் மற்றும் கங்கனா ரனாவத் படமாக தான் இருக்கும் இது என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை ’அயோத்தி’ இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்குவாரா அல்லது வேறு இயக்குனர் இயக்குவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே பாலிவுட் பிரபலம் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் நடிக்கும் படம் ஒன்றின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதேபோல் நயன்தாராவுடன் மாதவன் நடிக்கும் ’தி டெஸ்ட்’ என்ற திரைப்படம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
And... action! #AhimsaEntertainment & #TridentArts are teaming up for a MEGA project. A powerhouse duo from North & South all set to light up the screen! 🎆
— Ahimsa Entertainment (@ahimsafilms) July 17, 2023
SHOOT STARTS SOON. Can you guess our stars? 🎭@tridentartsoffl @deepa_iyer_ @vithurs_ @ahimsafilms pic.twitter.com/q4C0jtb8ob
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com