மாதவனின் 'ராக்கெட்டரி' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மாதவன் நடித்து தயாரித்து இயக்கிய ‘ராக்கெட்டரி’ திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது என்பது தெரிந்ததே.
தமிழ் உள்பட 6 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் ஊடகங்கள் அனைத்தும் இந்த படத்தை கொண்டாடின என்பதும் குறிப்பிடத்தக்கது. ரூபாய் 25 கோடி பட்ஜெட்டில் உருவாகிய இந்த படம் இதுவரை உலகம் முழுவதும் 40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ‘ராக்கெட்டரி’ திரைப்படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ பெற்றுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் அமேசான் பிரைம் வீடியோவில் ஜூலை 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் ப்ரைம் வீடியோவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘ராக்கெட்டரி’ ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளிவந்ததை அடுத்து ‘ராக்கெட்டரி’ திரைப்படத்தை ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
hop on for a space adventure ??#RocketryOnPrime, July 26 pic.twitter.com/W3JDZEz2eD
— amazon prime video IN (@PrimeVideoIN) July 20, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments