மாதவன் நடித்த 'ராக்கெட்டரி': ரிலீஸ் தேதியுடன் அட்டகாசமான புதிய போஸ்டர்!

  • IndiaGlitz, [Monday,June 20 2022]

பிரபல நடிகர் மாதவன் நடித்து, தயாரித்து, இயக்கிய ‘ராக்கெட்டரி’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு கதையான ‘ராக்கெட்டரி’ திரைப்படத்தில் நடிகர் மாதவன், நம்பி நாராயணன் கேரக்டரில் நடித்து இயக்கி உள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. இந்த நிலையில் இந்த படம் வரும் ஜூலை 1ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் அட்டகாசமான புதிய போஸ்டர் வெளியாகி ஜூலை 1இல் திரை அரங்குகளில் இந்தப் படம் வெளியாவதை உறுதி செய்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாதவன், சிம்ரன், ரவி ராகவேந்திரா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார், தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விக்கி-நயன் ஹனிமூன் அசத்தல் புகைப்படங்கள்: எந்த நாடு தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 9ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்தார் என்பதும் திருமணம் முடிந்த கையோடு திருப்பதி உள்பட பல ஆன்மீக தலங்களுக்கு புதுமண தம்பதிகள்

'தல' தயாரிப்பில் 'தளபதி' விஜய்: கோலிவுட் ஆச்சரியம்

தல தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து கோலிவுட் திரையுலகம் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

5 ஆண்டு 'பாகுபலி' சாதனையை முறியடித்த 'விக்ரம்': தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா?

கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை 'பாகுபலி' திரைப்படம் பெற்றிருந்த நிலையில் அந்த சாதனையை கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படம் முறியடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 

'பொன்னியின் செல்வன்'  நடிகையுடன் டேட்டிங் செல்கிறாரா நாக சைதன்யா?

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும் தெலுங்கு பிரபல நடிகருமான நாகசைதன்யா 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்த நடிகையுடன் டேட்டிங் செய்வதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

'விண்ணை தாண்டி வருவாயா' படத்தை மிஸ் செய்துவிட்டேன்: இளம் நடிகர் வருத்தம்

 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தில் நான்தான் நடித்திருக்க வேண்டும் என்றும் அந்த படத்தை நான் மிஸ் செய்து விட்டேன் என்றும் இளம் நடிகர் ஒருவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.