மாதவன் நடிக்கும் 'மாறா' படத்தின் மாஸ் அப்டேட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மாதவன், அனுஷ்கா, அஞ்சலி நடிப்பில் உருவான ’சைலன்ஸ்’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் மாதவன் நடித்த அடுத்த திரைப்படமான ’மாறா’ திரைப்படமும் விரைவில் ஓடிடியில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் மாஸ் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ‘மாறா’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
’யார் அழைப்பது’ என்று தொடங்கும் இந்த பாடலை கவிஞர் தாமரை எழுதியுள்ளார் என்பதும், சித்ஸ்ரீராம் குரலில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாதவன், ஷராதா ஸ்ரீநாத், அலெக்சாண்டர் பாபு, ஷிவேதா, மெளலி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை திலீப்குமார் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையில், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஓடிடியில் வரும் டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.
First single from #MAARA is on its way!
— Diamond Babu (@idiamondbabu) October 27, 2020
A @GhibranOfficial & @Kavithamarai musical in the magical voice of sid sriram#MaaraWithThink #MAARAWorldPremiereOnDec17@ActorMadhavan @ShraddhaSrinath@SshivadaOffcl @dhilip2488 @ShrutiNallappa pic.twitter.com/NIG53eqow8
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments