பத்மஸ்ரீ விருதால் ஸ்கிரிப்ட் மாறுகிறதா? 'நம்பி நாராயணன்' படம் குறித்து மாதவன் விளக்கம்

  • IndiaGlitz, [Sunday,January 27 2019]

நடிகர் மாதவன் 'ராக்கெட்டரி' என்ற படத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரக்டரில் நடிப்பதோடு, அந்த படத்தை அனந்த் மகாதேவானுடன் இணைந்து இயக்கியும் வருகிறார் என்பது தெரிந்ததே. தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

இந்த நிலையில் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களுக்கு சமீபத்தில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருதினை அறிவித்தது. இதனையடுத்து இந்த படத்தின் ஸ்க்ரிப்டில் கிளைமாக்ஸ் காட்சி மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளம் மூலம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மாதவன், 'பத்ம ஸ்ரீ விருதுக்காக ஸ்கிர்ப்ட்டில் எந்த மாற்றமும் செய்யவில்லை' என்று கூறியுள்ளார்.

மாதவன், சிம்ரன் நடிப்பில் உருவாகி வரும் 'ராக்கெட்டரி' படத்திற்கு 'விக்ரம் வேதா' புகழ் சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். இந்த படம் மூன்று மொழிகளிலும் இவ்வாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஆரவ்வுடனான உறவு குறித்து ஓவியா விளக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஆரவ்வுடன் ஓவியாவுக்கு காதல் ஏற்பட்ட நிலையில் அதன்பின் அவருடன் காதல் இல்லை, நான் சிங்கிள் தான் என்று ஓவியா ஒரு டூவீட்டை பதிவு செய்தார்

பிப்ரவரி 1ல் ரிலீஸ் ஆகும் ஐந்து திரைப்படங்கள் குறித்த ஒரு பார்வை

ஜனவரியில் ரஜினியின் 'பேட்ட' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' வெளியானதால் பல திரைப்படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

மெகா ஸ்டாரின் அடுத்த படத்தில் நயன்தாரா - தமன்னா!....

தெலுங்கு திரையுலக மெகா ஸ்டார் சிரஞ்சிவி நடித்து வரும் 151வது படமான 'சயிரா நரசிம்ம ரெட்டி' படத்தில் நாயகியாக  நயன்தாரா மற்றும் முக்கிய வேடம் ஒன்றில் தமன்னாவும் நடித்து வருவது தெரிந்ததே.

இந்தியில் ரீமேக் ஆகும் செல்வராகவனின் சூப்பர் ஹிட் திரைப்படம்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகிய செல்வராகவன் இயக்கிய 'என்.ஜி.கே' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து

'96' ரீமேக் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு

விஜய்சேதுபதி, த்ரிஷா ஆகிய இருவரும் ராம்-ஜானு கேரக்டர்களாக வாழ்ந்த திரைப்படம் '96'. இந்த படம் தமிழில் கடந்த ஆண்டு வெளியாகி, படம் பார்த்த ஒவ்வொருவரையும் தங்கள் பள்ளி காலத்து மலரும் நினைவுகளுக்கு அ