பத்மஸ்ரீ விருதால் ஸ்கிரிப்ட் மாறுகிறதா? 'நம்பி நாராயணன்' படம் குறித்து மாதவன் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மாதவன் 'ராக்கெட்டரி' என்ற படத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரக்டரில் நடிப்பதோடு, அந்த படத்தை அனந்த் மகாதேவானுடன் இணைந்து இயக்கியும் வருகிறார் என்பது தெரிந்ததே. தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
இந்த நிலையில் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களுக்கு சமீபத்தில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருதினை அறிவித்தது. இதனையடுத்து இந்த படத்தின் ஸ்க்ரிப்டில் கிளைமாக்ஸ் காட்சி மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளம் மூலம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மாதவன், 'பத்ம ஸ்ரீ விருதுக்காக ஸ்கிர்ப்ட்டில் எந்த மாற்றமும் செய்யவில்லை' என்று கூறியுள்ளார்.
மாதவன், சிம்ரன் நடிப்பில் உருவாகி வரும் 'ராக்கெட்டரி' படத்திற்கு 'விக்ரம் வேதா' புகழ் சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். இந்த படம் மூன்று மொழிகளிலும் இவ்வாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Nope . Nothing changes in the script.. ?????????????? https://t.co/6dqWLtxJoq
— Ranganathan Madhavan (@ActorMadhavan) January 26, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout