முதல்முதலாக ஜோடி சேரும் மாதவன் - சமந்தா: வைரலாகும் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Thursday,January 16 2020]

நடிகர் மாதவன் கடந்த 2000ம் ஆண்டிலிருந்து தமிழ் சினிமாவில் பிளேபாய் கேரக்டர் முதல் முதிர்ச்சியான கேரக்டரை ஏற்று நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவருடன் சிம்ரன், திரிஷா உள்பட பல முன்னணி நடிகைகள் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாதவன் தற்போது ’நிசப்தம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்தப் படத்தில் மாதவனுடன் அனுஷ்கா, அஞ்சலி உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மாதவனுடன் சமந்தா நடித்து வருகிறார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் மாதவன் மற்றும் சமந்தா ஆகிய இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பரப் படத்திற்காக நடித்து வருகிறார்கள் என்பதும் திரைப்படத்தில் இணையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ராஜா ராணி வேடம் போல் மாதவன் மற்றும் சமந்தா நடித்து வரும் இந்த காட்சிகளின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது விளம்பர படத்தில் இணைந்த இருவரும் விரைவில் சினிமாவிலும் இணைந்து நடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.