சார்லி ரீமேக்கில் விஜய்-மாதவன் இணைவார்களா?

  • IndiaGlitz, [Monday,June 13 2016]

சமீபத்தில் வெளியான துல்கர்சல்மான், பார்வதி நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான 'சார்லி' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த ரீமேக் படத்தில் நடிக்க மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மாதவன் இந்த படத்தில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் இந்த படத்தை இயக்க தயாரிப்பு தரப்பு இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் அணுகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏ.எல்.விஜய் தற்போது பிரபுதேவா, தமன்னா நடித்து வரும் 'தேவி' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்த படத்திற்கு பின்னர் அவர் ஜெயம் ரவியுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் 'சார்லி' ரீமேக் படத்தை இயக்கும் வாய்ப்பும் அவரை நெருங்கியுள்ளதால் எந்த படத்தை முதலில் இயக்குவார் என்பது இன்னும் ஒருசில நாட்களில் தெரிய வரும்.