20 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்திய விஞ்ஞானி கேரக்டரில் மாதவன்
- IndiaGlitz, [Thursday,July 12 2018]
'இறுதிச்சுற்று', 'விக்ரம் வேதா; படங்களுக்கு பின்னர் கோலிவுட் திரையுலகில் மீண்டும் பிசியான நடிகர் மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி கேரக்டரில் நடிக்கவுள்ளார்,.
திரவ எரிபொருளைப் பயன்படுத்தி ராக்கெட் வடிவமைத்த முக்கியமான விஞ்ஞானிகளில் ஒருவரான இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகவுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாராகவுள்ள இந்த படத்தை ஆனந்த் மகாதேவன் என்பவர் இயக்கவுள்ளார்.
பணம் பெற்றுக்கொண்டு ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட விஞ்ஞானி நம்பி நாராயணன் பின்னர் சிபிஐ விசாரணையில் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். இருப்பினும் இவர் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க 20 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தினர். இந்த 20 ஆண்டுகளில் இவர் விசாரணை என்ற பெயரில் போலீஸால் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. விறுவிறுப்புகள் நிறைந்த இவரது வாழ்க்கை வரலாறு படத்தில் நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடித்து வருகிறார்.