close
Choose your channels

மீண்டும் ரொமான்ஸ் நாயகன் ஆகும் மாதவன்.. இயக்குனர், டைட்டில் குறித்த தகவல்..!

Tuesday, May 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் ரொமான்ஸ் நாயகன் என்றால் உடனே பலருக்கும் ஞாபகம் வருவது மாதவன் தான் என்பதும் அவரது ஏராளமான ரொமான்ஸ் படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது என்பது பலர் அறிந்ததே.

குறிப்பாக ’அலைபாயுதே’ ’என்னவளே’ ’மின்னலே’ ’டும் டும் டும்’ ’பார்த்தாலே பரவசம்’ ’ரன்’ ’பிரியமான தோழி’ ’ஜேஜே’ ஆகிய ரொமான்ஸ் படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது என்பது தெரிந்ததே.

ஆனால் ஒரு கட்டத்தில் அவர் ரொமான்ஸ் படங்களில் இருந்து ஆக்சன் படங்கள் பாதைக்கு மாறினார் என்பதும் தற்போதும் சில ஆக்சன் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீண்டும் நடிகர் மாதவன் ரொமான்ஸ் படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏஎல் விஜய் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ’இதுவும் ஒரு காதல் கதை’ என்ற டைட்டில் இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment