குடும்ப தொழில் முறையை அடுத்த தலைமுறையும் எடுத்து நடத்துவதே ஆகசிறந்தது -மாதம்பட்டி ரங்கராஜ்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமையல் துறையில் கலக்கும் நம்ம கிச்சன் கிங் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் நமது இந்தியா க்ளிட்ஸ் யூடுயுப்அளித்த பேட்டியில் ,
சவுக்கு கட்டை ,விறகு ,அடுப்பு ,நெருப்பு ,வியர்வை மற்றும் சமையல் இது எல்லாமே என்னுடன் எனக்குள் இணைந்த ஒன்று ஆகும்.எனது அப்பா சமைக்கும் காலத்தில் ஆரம்பத்திலேயே விறகில் தான் சமைத்தார்.அனால் நான் இப்போதும் பிரியாணி எல்லாம் விறகு அடுப்பில் தான் சமைக்கிறேன்.சிலரால் அனலில் இருக்க முடியாது.
ஆனால் எல்லா இடங்களிலும் அதை எதிர்பார்க்க முடியாது அல்லவா !பெரிய ஸ்டார் ஹோட்டலில் ஏர் கண்டிஷனர் அந்த இடத்திற்கு சௌகர்யமாக சமைக்க என்னலாம் தேவையோ அவை அனைத்தும் இருக்கும்.ஆனால் மண்டபங்களில் இருக்காது .
எனவே ஒரு சமையல் காரனுக்கு எல்லா இடங்களும் பரிட்சயமான தாக இருக்க வேண்டும்,.சமையல் கலை என்னை ஈர்த்ததுக்கு பல காரணம் இருக்கு.ஒரு பேமிலி பிஸினஸ் அடுத்த தலைமுறையும் எடுத்து நடத்த வேண்டும் அதுவே ஆக சிறந்தது ஆகும்.
எப்போதுமே அப்பாக்கள் தொழிலில் ஒரு வித அனுபவங்களை கற்று தேர்ந்து வைத்து இருப்பார்.நம்ம தலைமுறையில் நாம் புதிதாக ஒன்றை ஒரு தொழிலை ஆரம்பிப்பது ஒரு வழி .ஆனால் யார் யாருக்கெல்லாம் பேமிலி பிஸினஸ் என்று ஒன்று உள்ளதோ அவர்கள் எல்லோரும் அப்பாவை தொடர்ந்து நாம் எடுப்பது நல்ல விஷயம்.தலை தலைமுறையாக அந்த குடும்ப தொழில் தலை தூக்க வேண்டும் .வாழையடி வாழையாக வளர வேண்டும்.நம்ம பேமிலி பிஸ்னஸ் என்பதை இப்போ உள்ள சமுதாய நிலைக்கு ஏற்றவாறு நடத்த வேண்டும் அதில் சாதிக்க வேண்டும் நான் விரும்பும் ஒன்று .
எனக்கு சின்ன வயதில் இருந்தே பிடித்த விஷயம் என்னவென்றால் சமையலறை மற்றும் டைனிங் அரையும் தான்.என் அப்பா என்னை என்ஜினீயரிங் படிக்க சொன்னார்.ஆனால் எனக்கு பிடித்தது வேண்டியது சமைப்பது பரிமாறுவது இது தான் .1983 இல் லட்சுமி கேட்டரிங் சர்விஸ் என அப்பா தொழில் தொடங்கினார்.நான் இந்த துறைக்கு 2002 க்கு வந்தேன்.பிறகு என் சித்தப்பா மற்றும் எனது தம்பி எல்லோரும் சேர்ந்து பேமிலி பிஸ்னஸ்-ஐ ரன் செய்தோம்.
2016இல் லட்சுமி கேட்டரிங் சர்வீஸ் -ஐ மாதம்பாட்டி தங்கவேலு ஹாஸ்பிடலிட்டி பிரைவேட் லிமிடெட் என கன்வெர்ட் செய்தோம்.இறுதியாக வெட்டிங் கம்பெனி தான் இப்போது மாதம்பாட்டி பாடசாலை என்னும் பிராண்ட்டில் பண்ணி கொண்டிருக்கிறோம் .
2014இல் மாதம்பட்டி புட் சர்வீஸ் என்ற ஒரு இண்டஸ்ட்ரியல் கேட்டரிங் ஆரம்பித்தோம் .அதில் ஒரு நாளைக்கு 35 ஆயிரம் மீல்ஸ் ஒரு நாளைக்கு கோயம்புத்தூரில் பண்ணிட்டு இருக்கோம்.தற்போது பெங்களூரில் அடுத்த மாதம் 10 ஆயிரம் மீல்ஸ் காபாஸிட்டி-யில் தொடங்க இருக்கிறோம்.பிறகு கலிபோர்னியாவில் கோவை கஃபே என்று ஆரம்பித்து உள்ளோம்.
சினிமாவில் நான் இருந்தேன் ஆனால் எனக்கு சினிமாவை காட்டிலும் சமயல் துறையே பொருத்தமானது என நினைத்தேன்.எனவே அதன் வழியே சென்றேன்.வெற்றி பெற்றேன்.இன்னும் பல வெற்றிகளை சமையல் துறையில் காண வேண்டும் என நினைக்கிறன் என மாதம்பட்டி ரங்கராஜ் அவரது வெற்றி பயணங்களை பகிர்ந்துள்ளார்.மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments