4 லட்சத்திற்கும் மேலான தமிழ் வார்த்தைகள்: மதன்கார்க்கியின் புதிய முயற்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
4 லட்சத்துக்கும் மேலான தமிழ் வார்த்தைகள் கொண்ட அகராதி செயலி ஒன்றை மதன் கார்க்கி தனது குழுவினருடன் இணைந்து செய்து முடித்துள்ளார். கார்க்கி ரிசர்ச் பவுண்டேஷன் என்ற அமைப்பின் தலைமையில் தமிழ்-ஆங்கில அகராதி மொபைல் செயலி ஒன்றை மதன் கார்க்கி வடிவமைத்துள்ளார்.
இந்த மொபைல் செயலியில் 4.25 லட்சம் தமிழ் வார்த்தைகளும் அதற்கு இணையான ஆங்கில வார்த்தைகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சங்கத் தமிழில் உள்ள தமிழ் வார்த்தைகள் முதல் தற்போதைய டெக்னாலஜி தமிழ் வார்த்தைகள் வரை இதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் தமிழ் ஆங்கிலம் ஆகிய இரண்டிலும் நீண்ட காலம் ஆய்வு செய்து இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த செயலியில் சட்டம் ,விவசாயம், அரசியல், டெக்னாலஜி, கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல் உள்பட பலர் பல்வேறு தலைப்பின் கீழ் ஏராளமான தமிழ் வார்த்தைகளும் அதற்கு ஆங்கில மொழி பெயர்ப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்
மாணவர்கள் முதல் அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் வகையில் மொழிபெயர்ப்பு செயலியாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செயலி கையில் இருந்தால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமிழை தவறின்றி தெரிந்துகொள்ள பேருதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு தமிழ் வார்த்தைகளையும் ஒலிக்கும் முறை, அந்த வார்த்தைக்கான அர்த்தம், உதாரணங்கள் ஆகியவைகளும் இந்த செயலியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments