கே.டி.ராகவன் பாலியல் காணொளி எதிரொலி.....!மதன் டைரி YOUTUBE channel முடக்கம்....!
- IndiaGlitz, [Wednesday,August 25 2021]
முன்னாள் தமிழக பாஜக பொதுச் செயலாளர் கேடி.ராகவன் குறித்த பாலியல் காணொளி ஒன்று, நேற்று இணையத்தில் வைரலாக பரவியது.
சர்ச்சையான பாலியல் காணொளி....!
ஊடகவியலாளர் மதன் வெளியிட்டுள்ள காணொளியில் ராகவன், பாஜக மகளிர் அணியில் உள்ள பெண் ஒருவரிடம் பேசுவது போல் வீடியோ காட்சிகள் அமைந்திருந்தது. அதிலும் அவர் மேல்சட்டை அணியாமல், பாலியல் ரீதியான செய்கைகள் செய்வது போலவும் வீடியோ அமைந்திருந்தது.
இந்த செய்தியை வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளர் மதன், தன்னுடைய வீடியோவில், மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அவர்களிடம் தெரிவித்த பின், அவரின் ஒப்புதலின் பேரில் தான் இந்த வீடியோவை வெளியிட்டோம். ஆதாரங்கள் இருந்தால் தாராளமாக வெளியிடுங்கள் என்று அவருடன் பேசிய ஸ்கீரீன்ஷாட் ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.
பதவி விலகிய ராகவன்....!
இதன் காரணமாக தான் பதவியிலிருந்து விலகுவதாக கூறிய ராகவன், தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும்...எனனை சார்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும்...நான்30 வருடமாக எந்த ஓரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன்..இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன்...என்னையும் என்கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் திரு.k. அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்ட படி சந்திப்பேன். தர்மம் வெல்லும் என்ற கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இந்த செய்தி தான் ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
எதிர்ப்பு தெரிவித்த அரசியல் பிரமுகர்கள்....!
ராகவன் சர்ச்சை விவகாரம் குறித்து நடிகைகள் மற்றும் பாஜக பிரமுகர்களான காயத்ரி ரகுராம் மற்றும் குஷ்பூ ஆகியோரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
சட்டம் அனைவருக்கும் சமமானது. குற்றம் செய்தவர்களை சட்ட ரீதியாக தண்டிக்க வேண்டும் என்று காயத்திரியும், இந்த விவகாரம் கட்டாயமாக விசாரிக்க வேண்டிய ஒன்றுதான், இது துரதிஷ்டவசமான சம்பவம் என்றும் குஷ்பூ-வும் கருத்து தெரிவித்து வந்தனர்.
ராகவன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும், கரூர் எம்.பி.ஜோதிமணி தமிழக காவல்துறை டிஜிபியிடம் புகாரளித்திருந்தார்.
கே.டி.ராகவன் குட்டி ரீவைண்ட் .....!
பாஜகவில் மூத்த தலைவர்களுக்கு மத்தியில், மிஸ்டர் கிளீன் என்றும் சொல்லப்பட்டு வந்தவர் தான் கே.டி.ராகவன். செங்கல்பட்டு மாவட்டத்தில், சிங்கப் பெருமாள் கோவிலைச் சேர்ந்த இவர் வழக்கறிஞராகவும், தமிழக பாஜகவில் மாநிலப் பொதுச் செயலாளராகவும் இருந்து வந்தார். பாஜக சார்பாக கடந்த 1999 மற்றும் 2011-இல் செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியிலும், 2006-ல் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியிலும், 2016-ல் கொளத்துார் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டார்.தொலைக்காட்சிகளில் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம், பரவலாக அறியப்பட்டார் ராகவன்.
இதைத்தொடர்ந்து பாலியல் காணொளிக்கு சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்ப, இப்பிரச்சனை ஊடகங்களில் பூதாகரமாக வெடித்தது.
மதன் டைரி சேனல் முடக்கம்....!
ஊடகவியலாளர் மதன் சென்ற வருடம், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில், அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். ராகவன் குறித்த குற்றச்சாட்டுகளை கூறும் மதன், இதுபோன்ற மேலும் சில அரசியல் கட்சி பிரமுகர்கள் குறித்த வீடியோக்கள் மற்றும் செய்திகளை, ஆதாரப்பூர்வமாக பத்திரிக்கையாளராக நான் வெளியிடுவேன் என்றும் கூறியிருந்தார்.
இந்தநிலையில் ஊடகவியலாளர் மதனின் யுடியூப் பக்கம் இன்று காலை முதல் முடக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த காரணங்களால் முடக்கப்பட்டது, யார் முடக்கினார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான செய்திகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.