மாதம்பட்டி ரங்கராஜ் கன்னத்தில் பளார் பளாரென அடித்த நடிகை.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,September 28 2024]

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான மாதம்பட்டி ரங்கராஜ் ’மிஸ் மேகி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தின் ஒரு காட்சியில் மாதம்பட்டி ரங்கராஜை நாயகி ஆத்மிகா கன்னத்தில் பளார் பளார் என அடிக்கும் காட்சி உள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ், ஆத்மிகா, யோகி பாபு உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’மிஸ் மேகி’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாக வைரலாகி வருகிறது.

மணியரசு இயக்கத்தில், கார்த்திக் இசையில், கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை மாதம்பட்டி ரங்கராஜ் தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே 'மெஹந்தி சர்க்கஸ்’ மற்றும் ’பெங்குயின்’ ஆகிய திரைப்படங்களில் நடித்த நிலையில் தற்போது நடித்துள்ள காமெடி மற்றும் ரொமான்ஸ் கதை அம்சம் கொண்ட 'மிஸ் மேகி’ படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படமும் அவருக்கு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.