அசிங்கமாக பேசியே ஆடி கார் முதல் அடுக்குமாடி வரை...! "ஆபாச" மதனின் சொத்துமதிப்பு....!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆபாசமகாவும், அதிகாரமாகவும் பேசிய பப்ஜி மதன் தலைமறைவானதை தொடர்ந்து, அவரது மனைவி கிருத்திகாவை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
யுடியூப் தளம் :
மதனின் சேனலை பப்ஜி விளையாடக்கூடிய 18 வயதிற்கும் குறைவான சிறுவர்கள், சிறுமிகள், இளம்பெண்கள் பார்த்துவருகிறார்கள். பப்ஜி போன்ற லைவ் வீடியோ கேம்களில் எப்படி எளிதில் எளிதாக வெல்வது என்பது குறித்து, ஆபாசமாக பேசுவது மூலம் இவன் பிரபலமானான். குறிப்பாக மதனுடன் விளையாடும் சகபோட்டியாளர்கள் மற்றும் பெண்களிடம் ஆபாசமாக பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளான். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தால், என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது, தமிழகத்தில் உள்ள டாப் வக்கீல்கள் என் கையில் உள்ளனர். பல லட்சங்களை கொட்டி என்னால் அவர்களை விலைக்கு வாங்க முடியும். சேனல் போனாலும் பிரச்சனை இல்லை, ரசிகர்களிடம் பரிதாப ஓட்டுக்கள் வாங்கி, மற்றொரு சேனல் ஆரம்பித்து விடுவேன் என்று கூறியது பணத்திமிரின் உச்சம் எனலாம். ஆதரவற்ற மக்களுக்கு உதவுவதாகவும், இளைஞர்களிடம் கூகிள்-பே மூலம் காசு வாங்கி ஏமாற்றியுள்ளான் இந்த கொடூரன்.
மதன் மீது தமிழகம் முழுவதுமாக பல மாவட்டங்களில் இருந்து, 159 புகார்கள் இணையம் மூலமாக அளிக்கப்பட்டுள்ளது. தலைமறைவான மதனை தேடி சேலம், பெருங்களத்தூர் விரைந்த மத்திய புலனாய்வு காவல் துறையினர் அவரது மனைவியை கைது செய்தும், அவரது அப்பாவிடமும் பல மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் உண்மைகளை அவர் மனைவி கிருத்திகா கூறினார்.
கிருத்திகா உடந்தை:
"மதன் நடத்தும் இரண்டு யுடியூப் சேனல்களுக்கும் கிருத்திகா தான் அட்மினாக இருந்துள்ளார். இவருடைய மெயில் ஐடியை வைத்து தான் யுடியூப் -க்கான எல்லா வேலைகளும் துவங்கப்பட்டுள்ளது. மனைவிக்கு தெரிந்தே தான் மதன் இந்த கேவலமான வேலைகளை செய்துள்ளான். அவன் செய்யும் தவறுக்கு மனைவி உடந்தையாக இருந்த சம்பவம் காவல் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சொத்து மதிப்பு :
சிறிய உணவுக்கடை வைத்திருந்த மதனின் சொத்து மதிப்பு தற்போது ரூ. 3 கோடி முதல் ரூ.4 கோடி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிலும் குறிப்பாக யுடியூப் சேனல்கள் மூலம் ஆபாச பேச்சுக்கள் பேசியே,மாத வருமானம் 7 லட்சம் வரை சாதாரணமாக சம்பாதித்தாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் 2 BMW கார்கள் மற்றும் 2 வீடுகள் உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றது. ஆனால் மதனிடம் ஆடி கார் உள்ளதாகவும் சமீபத்தில், யுடியூப் தளத்தில் ஆதாரங்களுடன் கூடிய வீடியோ ஒன்று வைரலானது. இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், தொழில் நுட்ப உதவியுடன் ஆபாச மதனை பிடிக்க பல திட்டங்களை வகுத்து வருகின்றனர். மதனின் சொகுசு கார்களை பறிமுதல் செய்யவும், காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மதனால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால், ஆன்லைன் மூலமாக தைரியமாக புகார் கொடுக்கலாம், அவரது தகவல்கள் பாதுகாக்கப்படும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments