எதிர்காலத்தை மாத்துற சக்தி உன் ஒருத்திக்கு மட்டும் தான் இருக்கு: 'மேடம் வெப்' புரமோ வீடியோ

  • IndiaGlitz, [Saturday,February 10 2024]

ஹாலிவுட்டில் தயாரான ‘மேடம் வெப்’ என்ற திரைப்படம் சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட ஒரு த்ரில் படமாகும். பிப்ரவரி 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் இந்த படம் தமிழிலும் தமிழகத்தில் வெளியாக உள்ளது.

கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் டகோடா ஜான்சன், சிட்னி ஸ்வீனி, செலஸ்டி ஓ'கானர், இசபெலா மெர்சிட் மற்றும் தஹர் ரஹீம் உட்பட பல நடித்துள்ளனர்.

ஒரு கொடிய எதிரியால் வேட்டையாடப்படும் ஒரு பெண்ணுக்கு திடீரென எதிர்காலத்தை பார்க்கும் அபூர்வ சக்தி கிடைக்கிறது. இதிலிருந்து அவர் தன்னையும் தன்னை சேர்ந்தவர்களையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என தெரிகிறது.

இந்த படம் தமிழ் உள்பட பல இந்திய மொழிகளிலும் உலகம் முழுவதும் ஆங்கில மொழிகளிலும் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.