'விக்ரம்' படத்தின் இடைவேளையில் எந்த படத்தின் டிரைலர் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும், இந்த படத்தின் முதல் நாளுக்கான அத்தனை காட்சிகளின் டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் கமல்ஹாசனே நாளை சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் அதிகாலை 4 மணி காட்சியை ரசிகர்கள் மத்தியில் பார்க்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் 'விக்ரம்’ படத்தின் இடைவேளையில் சிபிராஜ் நடித்த ’மாயோன்’ படத்தின் ட்ரைலர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ’மாயோன்’ படத்திற்கு மிகப் பெரிய விளம்பரமாக பார்க்கப்படுகிறது.
சிபிராஜ் நடிப்பில் கிஷோர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாயோன்’ திரைப்படம் சமீபத்தில் சென்சாரில் ’யு’ சான்றிதழ் பெற்றது என்பதும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆளரவமற்ற கோவில் ஒன்றில் மர்மமான நிகழ்வுகள் நடைபெறும் நிலையில் அந்த நிகழ்வுகளை கண்காணிக்க செல்லும் கூட்டத்திற்கு என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதை. சிபிராஜ் ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கும் இந்த படத்தில் ராதாரவி, கேஎஸ் ரவிக்குமார், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் 'விக்ரம்’ படத்தின் இடைவேளையில் வெளியாக இருப்பதால் நல்ல விளம்பரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Maayon Theatrical Trailer along with #Vikram movie from tomorrow in theatres!#VikramFDFS #VikramFromTomorrow @ManickamMozhi @ilaiyaraaja @Sibi_Sathyaraj @actortanya #KSRavikumar @DirKishore @divomusicindia @proyuvraaj pic.twitter.com/XZ09pkVAI4
— Double Meaning Production (@DoubleMProd_) June 2, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com