இயக்குனர் நலன்குமாரசாமிக்கு நிச்சயதார்த்தம்: நவம்பரில் திருமணம்

  • IndiaGlitz, [Friday,September 15 2017]

விஜய்சேதுபதி, சஞ்சிதா நடித்த 'சூது கவ்வும்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன்பின்னர் 'காதலும் கடந்து போகும்' படத்தை இயக்கியவரும், விரைவில் வெளியாகவுள்ள 'மாயவன்' உள்ளிட்ட ஒருசில படங்களுக்கு திரைக்கதை எழுதியவருமான இயக்குனர் நலன்குமாரசாமிக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது

புதுக்கோட்டை அருகேயுள்ள கொத்தமங்கலம் என்ற கிராமத்தில் இன்று நலன்குமாரசாமியின் திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்தது.

புதுக்கோட்டையை சேர்ந்த சரண்யா என்பவர் தான் மணமகள். இவர்களது திருமணம் வரும் நவம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. இயக்குனர் நலன்குமாரசாமிக்கு நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்