'மாவீரன்' படத்தின் சில காட்சிகளை கட் செய்த படக்குழுவினர்.. ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,July 24 2023]

சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பாக இந்த படம் 50 கோடி ரூபாய் வசூலை தாண்டி 100 கோடி ரூபாயை நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டில் மட்டும் இந்த படத்தின் சில காட்சிகளை படக்குழுவினர் நேற்று முதல் கட் செய்து வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்நாட்டில் உள்ள 12 வயது குழந்தைகளும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக சில காட்சிகள் கட் செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து குழந்தைகள் தற்போது பார்க்க அனுமதிக்கும் வகையில் 12ஏ சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று விடுமுறை நாளில் குழந்தைகளுடன் வரும் பார்வையாளர் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ள 'மாவீரன்’ படத்தில் மிஷ்கின், யோகி பாபு, சுனில், சரிதா, மோனிஷா உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

குழந்தைகளுடன் ஷாலினி அஜித் பார்த்த திரைப்படம்.. வைரல் புகைப்படம்..!

அஜித்தின் மனைவி ஷாலினி தனது குழந்தைகளுடன் சமீபத்தில் ரிலீசான திரைப்படத்தை சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் பார்த்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

ஆரஞ்சு கலரில் ஒரு அம்சமான போட்டோஷூட்.. வாணி போஜன் வைரல் புகைப்படங்கள்..!

நடிகை வாணி போஜன் ஆரஞ்சு கலரில் அம்சமான போட்டோஷூட் புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது

எதிர்பாராமல் உயிரிழந்த ரசிகர்கள்.. வீடியோ காலில் ஆறுதல் கூறிய சூர்யா..!

நேற்று ஆந்திராவில் இரண்டு சூர்யா ரசிகர்கள் எதிர்பாராத வகையில் மரணமடைந்த நிலையில் அவர்களது குடும்பத்திற்கு வீடியோ கால் மூலம் சூர்யா ஆறுதல் கூறியுள்ளார்.

வெளிநாடு செல்லும் 'கங்குவா' குழு.. பாலிவுட் வில்லனுடன் மோதும் காட்சி படப்பிடிப்பு..!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'. இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ

மறுபடியும் மார்க்கெட்டை பிடிக்காமல் விட மாட்டாங்க போல.. அமலாபாலின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை அமலாபால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தார் என்பதும், அஜித் விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார் என்பதும் தெரிந்ததே.