மாவீரன் கிட்டு, கஹானி-2 படங்களின் சென்னை வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,December 05 2016]

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு, ஸ்ரீதிவ்யா நடித்த 'மாவீரன் கிட்டு' மற்றும் வித்யாபாலன் நடித்த 'கஹானி 2' ஆகிய படங்களின் சென்னை வசூல் குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது. அதுகுறித்து தகவல்கள் பின்வருமாறு:
சென்னையில் 'மாவீரன் கிட்டு' திரைப்படம் 21 திரையரங்குகளில் 245 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.47,22,670 வசூல் செய்துள்ளது. திரையரங்குகள் 70% பார்வையாளர்களால் நிரம்பியிருந்தது.

இதேபோல் வித்யாபாலனின் 'கஹானி' நல்ல வெற்றி பெற்றிருந்த நிலையில் அதன் இரண்டாம் பாகமான 'கஹானி 2' திரைப்படம் சென்னையில் 10 திரையரங்க வளாகங்களில் 91 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.31,62,740 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் நிரம்பியிருந்ததால் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருந்துள்ளது.