close
Choose your channels

கிளைமாக்ஸ் ஸ்டண்ட் காட்சியில் இதுவரை இல்லாத புதுமை.. 'மாவீரன்' குறித்த மாஸ் தகவல்..!

Monday, July 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தமிழ் மட்டுமின்றி இந்த படம் தெலுங்கிலும் ரிலீஸ் ஆகயிருப்பதால் ஆந்திராவிலும் இந்த படத்தை படக்குழுவினர் புரமோஷன் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்த ஆச்சரியமான தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கிளைமாக்ஸ் ஸ்டண்ட் காட்சி ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் சிங்கிள் சாட்டில் கிளைமாக்ஸ் ஸ்டண்ட் காட்சி எடுக்கப்பட்டது இதுதான் முதல் முறை என்றும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் மற்றும் வில்லன் நடிகர்கள் மோதிய இந்த ஸ்டண்ட் காட்சியை திரையில் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள இயக்குனர் மிஷ்கின் நடிப்பில் மிரட்டி இருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் இந்த கிளைமாக்ஸ் ஸ்டண்ட் காட்சி குறித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ள 'மாவீரன்’ படத்தில் மிஷ்கின், யோகி பாபு, சுனில், சரிதா, மோனிஷா உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment