விஷ்ணுவின் 'மாவீரன் கிட்டு' உண்மைக்கதையா?

  • IndiaGlitz, [Saturday,July 16 2016]

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு நடிப்பில் சமீபத்தில் பூஜை போடப்பட்ட 'மாவீரன் கிட்டு' படத்தின் படப்பிடிப்பு பழநி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. சுமார் 50 நாட்கள் இந்த பகுதியில் படப்பிடிப்பு நடைபெறும் என தெரிகிறது.
'ஜீவா' படத்திற்கு பின்னர் விஷ்ணுவுக்கு மீண்டும் இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா ஜோடி சேருகிறார். மேலும் பிரபல நடிகர் பார்த்திபன் இந்த படத்தின் ஒரு கேரக்டரில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் கதை ஒரு உண்மைக்கதை என்றும் கடந்த 1985ஆம் ஆண்டு மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு மாவீரனின் கதை என்றும் இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார். சுசீந்திரனின் நேர்த்தியான திரைக்கதையில் இந்த உண்மைக்கதை சுவாரஸ்யமாக படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் ஏற்கனவே இரண்டு பாடல்களை கம்போஸ் செய்துவிட்டதாகவும், விரைவில் மீதி பாடல்களை கம்போஸ் செய்யும் பணியில் ஈடுபடவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் மற்றும் ஆசியன் சினி கம்பைன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.