'மாவீரன்' படத்தின் சூப்பர் அப்டேட்.. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்..!

  • IndiaGlitz, [Saturday,July 01 2023]

சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ திரைப்படம் இம்மாதம் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்பட்டது.

ஏற்கனவே சென்னையில் உள்ள பிரபலமான கல்லூரியில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் தற்போது டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் துள்ளி குதித்து வருகின்றனர். தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ என்ற திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ள 'மாவீரன்’ படத்தில் மிஷ்கின், யோகி பாபு, சுனில் உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் நடிகை சரிதா ஒரு முக்கிய குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

ஜூலை 21ல் வெளியாகும் ஷங்கரின் அடுத்த படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' மற்றும் 'இந்தியன் 2' ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் அவருடைய எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் திரைப்படம் ஒன்றின் அதிகாரப்பூர்வ

செம உற்சாகம்… பார்டிக்கு ரெடியான நடிகை கங்கனா ரனாவத்… காரணம் இதுதான்?

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பை தவிர, இயக்குநர், தயாரிப்பாளர் அவதாரதங்களை எடுத்துள்ளார்

சிவகார்த்திகேயன் - ஏஆர் முருகதாஸ் படத்தில் இணைந்த 2 பிரபலங்கள்: வேற லெவல் எதிர்பார்ப்பு..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கப் போகிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது அந்த செய்தி கிட்டத்தட்ட உறுதி

12 வயதில் மகன் இருக்கும் நிலையில் சீரியல் நடிகை கர்ப்பம்.. ரசிகர்கள் வாழ்த்து..!

தொலைக்காட்சி சீரியல் நடிகை ஒருவருக்கு 12 வயதில் மகன் இருக்கும் நிலையில் தற்போது அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

'லியோ' பாடலுக்கு டான்ஸ் ஆடிய மன்சூர் அலிகான்.. அபராதம் விதிக்க நெட்டிசன்கள் கோரிக்கை..!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' படத்தில் இடம்பெற்ற 'நா ரெடி' என்ற பாடலுக்கு காரில் சென்று கொண்டிருக்கும்போதே டான்ஸ் ஆடிய மன்சூர் அலிகானுக்கு அபராதம் விதிக்க வேண்டும்