சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படம் குறித்த வதந்தி.. பதிலடி கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

  • IndiaGlitz, [Thursday,January 26 2023]

சிவகார்த்திகேயன் நடிப்பில் மண்டேலா இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மாவீரன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்த வதந்திகளை ஒரு சிலர் வேண்டுமென்றே பரப்பி வந்த நிலையில் அந்த வதந்திகளுக்கு தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனம் பதில் அளித்துள்ளது.

தங்களை தாங்களே பத்திரிகையாளர் என்று கூறிக்கொண்டு சினிமா சம்பந்தமான வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கும் ஒரு சிலர், ‘மாவீரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது சிவகார்த்திகேயனுக்கும் இயக்குனருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து இதுவரை எடுத்த படப்பிடிப்பு காட்சிகள் முழுவதையும் நிறுத்திவிட்டு புதிதாக ஒரு கதையை தேர்வு செய்திருப்பதாகவும் வதந்திகளை பரப்பப்பட்டது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது ‘மாவீரன்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் ‘மாவீரன்’ படம் குறித்து ஆதாரமற்ற வதந்திகள், பொய்யான செய்திகள் இணையத்தில் தொடர்ந்து பரவி வருகின்றன. அவற்றை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். ‘மாவீரன்’ படத்தின் பணிகள் எந்தவித பிரச்சனையும் இன்றி நடைபெற்று வருகிறது, வீரமே ஜெயம்! என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ’வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்’ என்ற வள்ளுவரின் குறளையும் பதிவு செய்து வதந்தி பரப்புவோர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது.