ரூ.100 கோடி வசூலை நெருங்கும் 'மாவீரன்' படத்தின் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் வசூல் ரூ.100 கோடியை நெருங்கியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இந்த படம் இன்று ஓடிடியிலும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘மாவீரன்’ படம் ஒரே வாரத்தில் 50 கோடி ரூபாய் இரண்டாவது வாரத்தில் 75 கோடி ரூபாய் வசூல் செய்ததாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படம் உலகம் முழுவதும் 89 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் தெரிவித்துள்ளது.
எனவே இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் ரூ.100 கோடி என்ற இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ மற்றும் ’டான்’ ஆகிய படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ள நிலையில் ‘மாவீரன்’ படம் இணையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், யோகி பாபு, சுனில், சரிதா, மோனிஷா உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
Thank you all for making our #Maaveeran/#Mahaveerudu a memorable film and a blockbuster one ❤️❤️❤️
— Shanthi Talkies (@ShanthiTalkies) August 9, 2023
🌟 @Siva_Kartikeyan
🎙️ @VijaySethuOffl / @RaviTeja_offl
🎬 @madonneashwin #VeerameJeyam #DhairiyameJeyam#BlockbusterMaaveeran#BlockbusterMahaveerudu@AditiShankarofl… pic.twitter.com/vBB48qkkal
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments