இந்த வாரம் 2 சூப்பர்ஹிட் தமிழ் படங்கள்.. ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்,.!

  • IndiaGlitz, [Wednesday,August 09 2023]

இந்த வாரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் நிலையில் ஓடிடியில் இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் வெளியாக இருப்பதை அடுத்து சினிமா ரசிகர்களுக்கு இந்த வாரம் கொண்டாட்டம் என்று கூறலாம்.

சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல், நிழல்கள் ரவி, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ’போர் தொழில்’ என்ற திரைப்படம் கடந்த ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது இந்த படம் 50 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் சோனி லைவ் ஓடிடியில் இந்த வாரம் வெளியாக உள்ளது

அதேபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான ’மாவீரன்’ திரைப்படம் கடந்த மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படம் இந்த வாரம் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த இரண்டு தமிழ் படங்களும் ரசிகர்கள் மனதை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அம்மு அபிராமி நடித்த ’வான் மூன்று’ என்ற திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகவுள்ளது.

மேலும் ‘பத்மினி’ என்ற மலையாள படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில், ‘நெய்மர்’ என்ற மலையாள படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது. மேலும் ‘ஹிடிம்பா’ என்ற தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில், ‘கமாண்டோ’ என்ற இந்தி படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.

More News

விஜய்க்கு கம்பேக் கொடுத்த 'காவலன்'..இணையதள டிரெண்ட்டாக்கிய நேசமணி.. இயக்குனர் சித்திக் காலமானார்..!

நடிகர் விஜய்க்கு 'அழகிய தமிழ் மகன்' 'குருவி' 'வில்லு' 'வேட்டைக்காரன்' 'சுறா' என தொடர்ச்சியாக தோல்வி படங்கள் வந்து கொண்டிருந்த நிலையில் அவருக்கு கம்பேக் கொடுத்த திரைப்படமான 'காவலன்' திரைப்படத்தை

மீண்டும் இணையும் பாலா-மிஷ்கின்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல்..!

பாலாவின் தயாரிப்பில் உருவான 'பிசாசு' என்ற திரைப்படத்தை மிஷ்கின் இயக்கிய நிலையில் தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் 'வணங்கான்' படத்தில் மிஷ்கின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல்

ரஜினியின் 'ஜெயிலர்' ரிலீஸ் எதிரொலி.. மலையாள 'ஜெயிலர்' படக்குழு எடுத்த அதிரடி முடிவு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் வரும் பத்தாம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின்  முதல் நாள் காட்சியின் முன்பதிவுகள்

இந்திய ராணுவத்துடன் ரூ.165 கோடியில் ஒப்பந்தம்.. அஜித் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..!

நடிகர் அஜித் நடிகராக மட்டுமின்றி  பைக் ஓட்டுநர், கார் ஓட்டுநர், உலகம் சுற்றும் வாலிபன் மற்றும் சிறந்த சமையல் செய்பவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி சமீப காலமாக அவர் ட்ரோன் தயாரிப்பிலும்

'விவாகரத்து இல்லாமல் சந்தோஷமான வாழ்க்கை.. தீபிகா படுகோனே கொடுத்த டிப்ஸ்..!

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனது கணவர் ரன்வீர் சிங்கை விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது சமூக