If you are bad, I am your dad: 'மாரி 2' டிரைலர் விமர்சனம்:
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கிய 'மாரி 2' திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தைவிட அசத்தலாக உள்ள இந்த படத்தின் டிரைலர் விமர்சனதை பார்ப்போம்.
சாவைப்பத்தி கவலைப்படாதவனை சாவடிக்கிறது ரொம்ப கஷ்டம்' என்ற தனுஷின் அறிமுகத்துடன் டிரைலர் தொடங்குகிறது. 'நான் கெட்டவங்களுக்கு எல்லாம் கெட்டவண்டா' என்ற பஞ்ச் டலயாக்குடன் தனுஷின் அட்டகாசம் ஆரம்பமாகிறது. முதல் பாகத்தின் அதே கெட்டப்பு, அதே சேட்டை, நக்கல், நய்யாண்டி அனைத்தும் தனுஷின் நடிப்பில் தொடர்கிறது.
ஏரியாவையே டார்ச்சர் கொடுத்து வரும் மாரிக்கே டார்ச்சர் கொடுக்கும் அராத்து ஆனந்தி கேரக்டர் சாய்பல்லவிக்கு. இதுவரை சாய்பல்லவியை அமைதியாக பார்த்த ரசிகர்கள் இந்த படத்தில் ஒரு துறுதுறு சாய்பல்லவியை பார்ப்பார்கள்.
டொவினோ தாமஸ் வில்லத்தன நடிப்பு மிரட்டலாக உள்ளது. I am a bad man என டொவினோ கூறும்போது If you are bad, I am your dad என ஆங்கில பஞ்ச் வசனமும் இந்த படத்தில் உள்ளது. மேலும் முதல் பாகத்தில் இருந்த 'யார் இடத்தில வந்து யார் சீன் போட்றது செஞ்சிருவேன்' என்ற வசனத்தின்போது தியேட்டர் அதிரும் என்பது உறுதி, டிரைலரின் இறுதியில் தனுஷின் சிக்ஸ்பேக் தோற்றமும் ரசிகர்களை விசிலடிக்கும் வகையில் உள்ளது.
யுவன்ஷங்கர் ராஜாவின் துள்ளல் இசை படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். மொத்தத்தில் தனுஷ் ரசிகர்களை குஷிப்படுத்தும் படமாக இந்த 'மாரி 2' இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments