'மாரி 2' பட நடிகருக்கு மீண்டும் புரமோஷன்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’மாரி 2’. இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்த டொவினோ தாமஸ்க்கு தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.
டொவினோ தாமஸ் தான் நீண்ட வருடமாக காதலித்த லிடியா என்ற பெண்ணை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே லிசா என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் லிடியா மீண்டும் கர்ப்பமானார். இதனையடுத்து இன்று அவருக்கு தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்ததாகவும் தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
டொவினோ தாமஸ் மீண்டும் தந்தையான செய்தி அறிந்ததும் மலையாள திரையுலகை சேர்ந்த முன்னணி பிரபலங்களான நிவின்பாலி, ஆஷிக் அபு, இந்திரஜித் சுகுமாரன், நீரஜ் மாதவ் உள்பட பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் டொவினோவின் ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ‘பாரன்சிக்’ என்ற சூப்பர்ஹிட் படத்தில் நடித்த டொவினோ தாமஸ், தற்போது ‘கிலோமீட்டர் அண்ட் கிலோமீட்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் கடந்த மார்ச் மாதம் திரையிட திட்டமிட்ட நிலையில் கொரோனா காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments