ஓடிடி பக்கம் போவதில் தப்பே இல்லை: 'மாநாடு' வசூல் குறித்து வேதனை தெரிவித்த தயாரிப்பாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை குவித்த திரைப்படம் என்று கூறப்பட்ட ‘மாநாடு’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஓடிடி பக்கம் போவது தவறே இல்லை என வேதனையுடன் டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி வெளியானது சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் என்பதும் இந்த படம் முதல்நாளே 10 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் 25வது நாளில் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படம் இன்று 75 வது நாள் என்ற சாதனையை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனையுடன் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் ‘மாநாடு’ திரைப்படம் வெளியாகி 75 நாட்கள் ஆகியும் இன்னும் விநியோகஸ்தர்கள் கணக்கு ஒப்படைக்கவில்லை என்றும், ஒரு வெற்றிப் படத்திற்கே இந்த நிலைமை என்றால் மற்ற படங்களின் நிலையை என்ன சொல்ல? என்றும், இப்படி இருந்தால் எப்படி தொழில் செய்வது? என்றும் கேட்டுள்ளார். மேலும் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஓடிடி பக்கம் செல்வதில் என்ன தப்பு இருக்குனு யோசிக்க வைக்கிறாங்க? என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout