'மாநாடு' தயாரிப்பாளரின் அடுத்த படம்.. மாஸ் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான ’மாநாடு’ திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார் என்பது இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு நல்ல லாபம் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் ’மாநாடு’ வெற்றி வெற்றி படத்தை அடுத்து அவர் இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி ஹீரோவாகவும் நடிகை அஞ்சலி ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர் என்பதும், இந்த படத்தில் சூரி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் டைட்டில் நாளை மதியம் 12மணிக்கு அறிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் ராம் இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The Title look of #DirectorRam’s next #ProductionNo7 produced by @VHouseProd_Offl #starring @NivinOfficial @yoursanjali @sooriofficial will be released tomorrow at 12N.
— sureshkamatchi (@sureshkamatchi) October 10, 2022
Musical score by @thisisysr@eka_dop @UmeshJKumar @silvastunt @johnmediamanagr pic.twitter.com/PO4MOOZXGN
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments