'மாநாடு' தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் தென்னிந்திய பிரபலங்கள்!
- IndiaGlitz, [Tuesday,August 03 2021]
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிய ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. சற்று முன்னர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் ’நேரம்’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நாயகியாக தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அஞ்சலி நடிக்க உள்ளார். மேலும் சூரி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜாவின் இசையில் இந்த திரைப்படம் உருவாக உள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மம்மூட்டி, அஞ்சலி நடித்த ’பேரன்பு’ படத்திற்குப் பிறகு ராம் இயக்கியுள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய சினிமாவின் பெருமைமிகு முகங்களுடன் ஒரு சிறந்த பயணத்தின் தொடக்கம்... ❤#DirectorRam@NivinOfficial @thisisysr@yoursanjali @sooriofficial #VHouseProductions #ProductionNo7@johnmediamanagr pic.twitter.com/qUMRb4bbp3
— sureshkamatchi (@sureshkamatchi) August 3, 2021