அமீரின் அடுத்த படம்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட 'மாநாடு' தயாரிப்பாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் அமீர் நடிக்கும் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பை ’மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
சுரேஷ் காமாட்சி தயாரித்த ’மாநாடு’ திரைப்படம் கடந்த ஆண்டு இதே தினத்தில் வெளியானது என்பதும் ’மாநாடு’ படத்தின் ஒரு ஆண்டு நிறைவை படக்குழுவினர் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ’மாநாடு’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இயக்குனர் அமீர் நடித்து வரும் அடுத்த திரைப்படமான ’உயிர் தமிழுக்கு’ என்ற திரைப்படத்தை ’மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
அமீர், சாந்தினி, இமான் அண்ணாச்சி சுப்பிரமணியம் சிவா உள்பட பலர் நடிப்பில் உருவாகி இந்த படத்தை ஆதம்பாவா என்பவர் இயக்கியுள்ளார். வித்யாசாகர் இசையில் தேவராஜ் ஒளிப்பதிவில் அசோக் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#உயிர்தமிழுக்கு
— sureshkamatchi (@sureshkamatchi) November 25, 2022
Our @VHouseProd_Offl will release@directorameer's #UyirThamizhukku presented by #MoonPictures@sureshkamatchi @adham_bava @VIDYASAGARMUSIC@IamChandini @actImmanannachi @georgevijaypdm @direction_Shiva @VinodSa49941368 @gvravindran
@johnmediamanagr pic.twitter.com/KLK43y12PH
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com