சிம்புவின் 'பத்து தல' படத்தில் இணைந்த 'மாநாடு' பிரபலம்!

  • IndiaGlitz, [Tuesday,January 25 2022]

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படத்தில் பணிபுரிந்து அனைவரும் பாராட்டுகளைப் பெற்ற பிரபலம் ஒருவர் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படமான ‘பத்து தல’ என்ற திரைப்படத்தில் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு நடிப்பில் உருவாகிவரும் திரைப்படங்களில் ஒன்று ‘பத்து தல’ என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் ‘பத்து தல’ படத்தில் பிரபல எடிட்டர் பிரவீன் கே.எல் அவர்கள் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படத்தின் எடிட்டிங் பணியை சூப்பராக பிரவீன் செய்தார் என்பதும் அவருக்கு விமர்சகர்களின் பாராட்டு குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து சிம்புவின் ‘பத்து தல’ படத்திலும் மீண்டும் எடிட்டர் பிரவீன் இணைந்துள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பத்து தல’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மார்ச் முதல் வாரம் தொடங்க இருப்பதாகவும் இதில் சிம்பு உள்பட படக்குழுவினர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிம்புவுடன், கௌதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார் என்பதும் ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார் என்பதும், ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.