விவேக் மறைவிற்கு மரம் வைத்து மரியாதை செய்த சிம்பு படக்குழுவினர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்பு காரணமாக காலமான நிலையில் ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியில் மூழ்கியது என்பது தெரிந்ததே. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் வேண்டுகோளின்படி தமிழகத்தில் ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்ற இலக்கை நோக்கி விவேக் அவர்களின் பயணம் இருந்தது
அந்த பயணத்தில் அவர் 33 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை நட்டு இருந்த நிலையில் திடீரென அவர் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார். அவர் விட்ட பணியை தொடர்ந்து செய்வோம் என விஜய் ரசிகர்கள், திமுகவினர் உள்பட பலர் சூளுரைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் ’மாநாடு’ படத்தின் குழுவினர் விவேக்கின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மரக்கன்றுகளை நட்டனர். இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் மாநாடு குழுவினர் இன்று படப்பிடிப்பை தொடங்கும் முன்பாக படக்குழுவினர் அனைவரும் இணைந்து மரக்கன்றுகளை நட்டு விவேக்கின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments