நல்ல தொடக்கம், ‌வாழ்த்துகள் உறவுகளே: அஜித் ரசிகர்களுக்கு சுரேஷ் காமாட்சி வாழ்த்து!

  • IndiaGlitz, [Monday,September 27 2021]

அஜித் ரசிகர்களின் செயலை பாராட்டி ’நல்ல தொடக்கம் ‌வாழ்த்துகள் உறவுகளே’ என ’மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் அஜித் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த படத்தின் ரிலீஸ் தேதியை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளிவந்து இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அஜித்தின் ’வலிமை’ திரைப்படம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அஜித்தின் ரசிகர்கள் பத்தாயிரம் பனமர விதைகளை நடவு செய்துள்ளனர். இதுவரை ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பனமர விதைகளை விதைத்த ’பனைமர காதலர்கள்’ என்ற அமைப்புடன் கைகோத்து அஜித் ரசிகர்கள் இந்த சாதனையை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த செய்தியை சிம்பு நடித்துவரும் ’மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் அறிந்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், ‘நல்ல தொடக்கம் வாழ்த்துக்கள் உறவுகளே’ என்று பதிவு செய்துள்ளார்.