நீங்கள்லாம்... மக்களுக்கு என்னத்த பண்ண போறீங்க? 'மாநாடு' தயாரிப்பாளர் ஆவேசம்!
- IndiaGlitz, [Monday,October 12 2020]
சினிமா ஆரம்பித்த காலத்தில் இருந்தே சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சி தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து சாதித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்று முதல் இன்று வரை சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை கொஞ்சமும் குறையவில்லை. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டு காலமாக சினிமாக்காரர்கள் அரசியலில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர்..
இந்த நிலையில் சினிமாவில் இருப்பவர்கள் சினிமாவுக்கு எதுவும் செய்யாமல் அரசியலுக்கு செல்வதாகவும், சினிமாவுக்கு உதவி செய்யாத இவர்கள் மக்களுக்கு என்ன உதவி செய்யப்போகிறார்கள் என்றும் சிம்புவின் ‘மாநாடு’ பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் ஆவேசமாக கேள்வி எழுப்ப்யுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
சினிமாவிற்கு நடிக்க வருகிறார்கள். சினிமா அவர்களை வாழ வைக்கிறது. ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு மக்களைக் காக்கப் போகிறோம் எனப் புறப்பட்டுவிடுகிறார்கள். முதலில் உங்களை வாழவைத்த சினிமாவிற்கு ஏதாவது நல்லது பண்ணுங்க. அதையே செய்ய முடியாத நீங்கள்லாம்... மக்களுக்கு என்னத்த பண்ண போறீங்க?
சினிமாவிற்கு நடிக்க வருகிறார்கள். சினிமா அவர்களை வாழ வைக்கிறது. ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு மக்களைக் காக்கப் போகிறோம் எனப் புறப்பட்டுவிடுகிறார்கள். முதலில் உங்களை வாழவைத்த சினிமாவிற்கு ஏதாவது நல்லது பண்ணுங்க. அதையே செய்ய முடியாத நீங்கள்லாம்... மக்களுக்கு என்னத்த பண்ண போறீங்க??
— sureshkamatchi (@sureshkamatchi) October 12, 2020