'மாநாடு' படத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்: அரசுக்கு வேண்டுகோள் விடுத்த தயாரிப்பாளர்!
- IndiaGlitz, [Monday,November 22 2021]
சிம்பு நடித ’மாநாடு’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு திடீரென சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதை அடுத்து தமிழக அரசுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில மாதங்களாக பரவி வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்னும் ஒரு சிலர் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதை அடுத்து தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களில் குறிப்பாக திரையரங்குகள்ம் மார்க்கெட்டுகள் ஆகிய பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தமிழக அரசின் சுகாதாரத்துறை சமீபத்தில் அறிவித்தது.
இதன் காரணமாக ’மாநாடு’ படத்திற்கு தடுப்பூசி செலுத்தாதவர்கள் வந்தால் அவர்கள் திருப்பி அனுப்பிவிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் படக்குழுவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை... அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்! என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை... அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்! https://t.co/UI7l5DpNKQ
— sureshkamatchi (@sureshkamatchi) November 22, 2021